• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திலும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தின் கொழும்பு அலுவலகத்திற்காக ஐந்து (05) மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 252 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கலகெடிஹேன, கண்டி வீதி, 32 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள M/s KSJ Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்கும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவ மற்றும் சமாந்தர விஞ்ஞான பீடம் சார்பில் உத்தேச துணை சிகிச்சை கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை 767 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு கொழும்பு 14, மாதம்பிட்டிய வீதி, 295 ஆம் இலக்க மனையிடத்தில் அமைந்துள்ள M/s Sunken Construction (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிப்பதற்குமாக பதில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.