• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அடிப்படை சட்டவாக்கங்களை ஒன்றிணைத்தல் - தண்டனை சட்டக் கோவைக்கான திருத்தங்கள்
- காலனித்துவ காலப்பகுதியில் சட்டமாக்கப்பட்டதும் சில சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டதுமான தண்டனை சட்டக் கோவையிலுள்ள சில பதங்களும் வௌிப்படுத்தல்களும், 1972 ஆம் ஆண்டின் குடியரசு அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், தற்போதைய சூழமைவுக்கு எந்தவித பொருத்தப்பாட்டையும் கொண்டிருக்க வில்லை. அதற்கிணங்க, தற்கால போக்குகளுக்கு பொருந்தும் பதங்களும் மற்றும் வௌிப்படுத்தல்களையும் கொண்டு அத்தகைய காலாவதியான பதங்களையும் வௌிப்படுத்தல்களையும் பதிலீடு செய்யும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வரைவு (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.