• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டமைப்புகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றுக்கான நீர்ப்பாசன ஒதுக்கங்களை திருத்தியமைத்தலும் மீளக் கட்டமைத்தலும்
- நீர்ப்பாசனத் திட்டங்களை முறையாக பேணும் பொருட்டு நீர்ப்பாசன ஒதுக்கங்களைப் பாதுகாப்பதற்கான தேவைப்பாடுகளை இனங்காணுவதற்கு நிலைத்துநிற்கும் நிகழ்ச்சித்திட்ட மொன்றை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது நடைமுறையிலுள்ள நீர்ப்பாசன ஒதுக்கங்களை மீளாய்வு செய்வதன் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு பொருத்தமான எல்லைகள் இனங்காணப்பட்டுள்ளன. அதற்கிணங்க, சட்டமா அதிபரின் உடன்பாட்டுடன், நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டமைப்புகள், ஆறுகள் மற்றும் கால்வாய்கள் என்பவற்றுக்கான உத்தேச புதிய ஒதுக்கங்கள் மற்றும் பாதுகாப்பு காணிகளின் எல்லைகளை தற்போதைய நீர்ப்பாசன கட்டளைச்சட்டத்திற்குரிய கட்டளைகளாக வர்த்தமானி அறிவித்தலொன்றுக்கு ஊடாக பிரகடனப்படுத்துவதற்கும் அதன் பின்னர், கூறப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.