• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நீரகவளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மைக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- இலங்கையின் கடற்பரப்பிற்கு இடையில் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிகளுக்கு இற்றைப்படுத்தப்பட்ட கப்பல் பயணம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் பொருட்டு 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகத்துடன் இருதரப்பு உடன்படிக்கையொன்றை இலங்கை கைச்சாத்திட்டுள்ளதுடன், 2005ஆம் ஆண்டில் அந்த உடன்படிக்கையில் செய்யப்பட்ட திருத்தமே தற்போது அமுலிலுள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டில் உடன்படிக்கையொன்றின் ஊடாக மின்னணு கப்பல் வரைபடங்களை உருவாக்கி விநியோகிக்கும் அதிகாரத்தை தேசிய நீரகவளங்கள் ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மையானது ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளது. ஆதலால், நியம கப்பல் வரைபடங்களையும் மின்னணு கப்பல் வரைபடங்களையும் உருவாக்கி விநியோகிப்பதற்கான அதிகாரத்தை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நியம கப்பல் வரைபடங்களையும் மின்னணு கப்பல் வரைபடங்களையும் உருவாக்கி விநியோகிப்பதற்கு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீளாய்வு செய்து கூறப்பட்ட உடன்படிக்கையை திருத்தும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.