• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கு 'கரும்பு பயிர்ச் செய்கையை' பிரதான பெருந்தோட்டப் பயிர் ஒன்றாக பெயரிடுதல்
- இலங்கையின் வருடாந்த சீனி நுகர்வானது 670,000 மெற்றிக்தொன்களாகும் என்பதுடன் இத்தேவைப்பாட்டில் 91% சதவீதமானவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. இந்த நோக்கத்திற்கு வருடாந்தம் உறப்படும் செலவினத் தொகை கிட்டத்தட்ட 350 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். 2020 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு சீனித் தேவைப்பாடானது 700,000 மெற்றிக்தொன்கள் வரை அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், இத்தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில், கிட்டத்தட்ட 104,000 ஹெக்டயார் விஸ்தீரணம் கொண்ட காணிகள் மொனராகலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, அநுராதபுரம், திருகோணமலை, அம்பாறை, பதுளை மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் கரும்பு பயிர்ச் செய்கைக்காக இனங்காணப்பட்டுள்ளன. அதற்கிணங்க, இலங்கையில் கரும்பு பயிர்ச் செய்கையை பிரதான பெருந்தோட்டப் பயிரொன்றாக பிரகடனப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.