• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹோமாகம, பிட்டிபன, மாஹேன வத்தையில் அமைந்துள்ள காணித் துண்டுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், கல்வி வௌியீட்டுத் திணைக்களம், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை ரெலிகொம் நிறுவனம் என்பவற்றுக்கு குறித்தொதுக்குதல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம் சார்ந்த அபிவிருத்தி பணிகளை மேம்படுத்துவதற்கும் அது தொடர்பிலான நிறுவனங்களை தாபிக்கும் பொருட்டும் ஹோமாகம, பிட்டிபன மற்றும் மாஹேனவத்தை பிரதேசங்களில் அமைந்துள்ள சுமார் 34.0 ஹெக்டயார் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணியிலிருந்து தேசிய அளவீட்டு ஆய்வுக்கூடமொன்றைத் தாபிக்கும் பொருட்டு அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கும் புத்தகங்கள் களஞ்சியசாலை தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்காக கல்வி வௌியீட்டுத் திணைக்களத்திற்கும் பயிற்சியளிப்பு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் தரவு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கை ரெலிகொம் நிறுவனத்திற்கும் காணித் துண்டுகளை குறித்தொதுக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.