• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கூட்டுறவுக் கொள்கை
- உத்தேச தேசிய கூட்டுறவுக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ள தேசிய கூட்டுறவுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பதில் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.