• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான அடிப்படை மூலப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு 02 தானிய களஞ்சிய சாலைகளை நிர்மாணித்தல்
- திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு இலங்கை திரிபோஷா கம்பனிக்கு தற்போது சொந்தமாக 1,200 மெற்றிக் தொன் கொள்ளளவினைக் கொண்ட சிறிய களஞ்சியசாலையொன்று மாத்திரம் உள்ளது. இதற்கிணங்க, திரிபோஷா சுப்போஷா உற்பத்தியை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு சோளம் மற்றும் சோயா அவரை அறுவடை மேலதிகமாக கிடைக்கப் பெறும் சந்தர்ப்பங்களில் இந்த மூலப் பொருட்களை களஞ்சியப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான களஞ்சிய வசதிகளை செய்து கொள்ளும் பொருட்டு இலங்கை திரிபோஷா கம்பனியின் நிதியினை பயன்படுத்தி அளவில் 4,000 மெற்றிக் தொன் கொள்ளளவைக் கொண்ட 02 தானிய களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.