• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1982 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய விலங்கியல் பூங்காக்கள் சட்டத்தை திருத்துதல்
- 1982 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய விலங்கியல் பூங்காக்கள் சட்டத்தை தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்தின் தற்கால தொழிற்பாடுகளுக்கும் அதன் நிறுவன ரீதியான கட்டமைப்புக்கும் ஏற்ற விதத்தில் திருத்த வேண்டுமெனத் தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, இயற்கை சுற்றாடலுக்கு புறம்பாக விலங்கினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் விலங்குகளின் இனப்பெருக்க நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை ஆராய்ச்சி ரீதியில் மேற்கொள்வதற்கு நிலவும் சட்ட வரையறைகளை நீக்கி தற்போதைய மற்றும் உத்தேச புதிய தொழிற்பாடுகளுக்கு ஏற்ற விதத்தில் 1982 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க தேசிய விலங்கியல் பூங்காக்கள் சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு தொடர்புபடுத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.