• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தெற்கு கொழும்பு துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு கிழக்கு முனைவிடத்திற்கு கப்பலிலிருந்து கரையோரம் வரை கையாளும் பாரந்தூக்கிகளையும் Gantry பாரந்தூக்கிகளையும் கொள்வனவு செய்தல்
- இலங்கை தெற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைவிடத்தின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு இலங்கை, இந்தியா மற்றும் யப்பானுக்கு இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் செய்யப்பட்டுள்ளது. தெற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைவிடத்தை செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான 06 பாரந்தூக்கிகளையும் மின்சாரத்தால் இயக்கும் இறப்பர் டயர்கள் இடப்பட்ட 18 Gantry பாரந்தூக்கிகளையும் கொள்வனவு செய்து தாபிக்கவேண்டியுள்ளது. இதற்கிணங்க, இந்த ஒத்துழைப்பு உடன்படிக்கை யிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த கொள்கலன் கையாள்கை உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.