• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு - 2019
- வரையறுக்கப்பட்ட சிலோன் உரக் கம்பனி மற்றும் Colombo Commercial Fertilizer Company Ltd., நிறுவனம் ஆகியவற்றின் ஆகஸ்ட் மாதத்திற்கான பசளைத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்யும் பொருட்டு, 5,500 மெற்றிக் தொன் யூரியாவை (Prilled) மெற்றிக் தொன் ஒன்று 322.74 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும், 60,000 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) மெற்றிக் தொன் ஒன்று 312.99 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும், 5,900 மெற்றிக் தொன் Muriate of Potash ஐ (சிகப்பு / இளஞ்சிகப்பு) மெற்றிக் தொன் ஒன்று 355.49 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்திலும் M/s Valency International Trading (Pvt.) Ltd., நிறுவனத்திலிருந்தும் அத்துடன் 15,800 மெற்றிக் தொன் Triple Super Phosphate ஐ மெற்றிக் தொன் ஒன்று 302.50 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s. Golden Barley International (Pvt.) Ltd நிறுவனத்திலிருந்தும் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவையின் தழுவு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது