• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ITMIS முறைமையை அமைச்சுக்களிலும் திணைக்களங்களிலும் தாபித்தல்
- நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு முன்னோடி கருத்திட்டங்களின் வெற்றியின் மீது சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் விசேட செலவின நிறுவனங்கள் என்பவற்றில் தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் CIGAS முறைமைக்குப் பதிலாக ஒன்றிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையை (ITMIS) நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறைமை சார்பில் Free Balance Inc. கம்பனியினால் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள் பயன்படுத்தப்படுவதோடு, இந்த மென்பொருள் பாவனையின் போது மேலும் செய்யப்பட்டவேண்டிய மேம்படுத்துகைகளை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யமுடியுமாவது இந்த கம்பனியின் ஊடாக மாத்திரமாகும். இதற்கிணங்க, ITMIS முறைமையை அரசாங்க நிறுவனங்கள் அனைத்திலும் தாபிப்பதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட தொழினுட்பக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் இந்தக் குழுக்களின் சிபாரிசுகளுக்கு அவைமாக Free Balance Inc. கம்பனியிடமிருந்து இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.