• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அஞ்சல் திணைக்களத்திற்கு புதிய சம்பள கட்டமைப்பை பெற்றுக் கொள்ளல்
- அஞ்சல் திணைக்களத்திற்கு புதிய சம்பள கட்டமைப்பொன்றைத் தயாரித்து ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததோடு, அமைச்சரவையினால் இது புகையிரத, சுகாதார, கல்வி, அஞ்சல் அடங்கலாக முழு மொத்த அரசாங்க சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் சம்பந்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்கத்துறை சம்பள மீளமைப்பு சம்பந்தமான விசேட ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான சிபாரிசுகள் அதேபோன்று ஏனைய சேவைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பலவற்றுக்கு உரியதாக அதன் சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது.

அமைச்சரவையினால் 2019 பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் கூட்டத்தில் இந்த ஆணைக்குழு அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக தொழினுட்ப மற்றும் நிதி மீளாய்வுகளைச் செய்து சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதற்கு உதவும் முகமாக உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் நியமித்துள்ளது. இந்தக் குழுவின் அறிக்கையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கிணங்க, அஞ்சல் திணைக்களத்திற்கு புதிய சம்பள அளவுத்திட்ட மொன்றைத் தயாரிக்கும் அவசரத் தேவைத் தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டதோடு, பிற சேவைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பலவற்றுக்கு உரியதாக அரசாங்கத்துறை சம்பளங்களை மீளாய்வு செய்வது சம்பந்தமான விசேட ஆணைக்குழுவின் சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினால் இந்த சந்தர்ப்பத்தில் அஞ்சல் திணைக்களத்திற்கு மாத்திரம் ஏற்புடையதாகும் விதத்தில் இந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றதென்பதனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ளவாறு விசேட ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப் பட்டுள்ள அனைத்து பிரேரிப்புகள் தொடர்பிலும் நிதி அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகள் கிடைக்கப் பெற்றவுடன் அஞ்சல் திணைக்களத்திற்கு உரியதாக இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக பரிசீலனை செய்வதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.