• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசத்தை கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு செயல்வலுவளிப்பதற்கு, நிர்மாணம், சுற்றுலா சேவைகள், இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் சார்பில் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஒன்றிணைத்தும், தேசத்தை கட்டியெழுப்பும் வரியின் கீழ் சிகரட் உற்பத்தியினை கொண்டு வருதலை உள்ளடக்கி, சில பதப்படுத்தல் கைத்தொழில்கள் தொடர்பில் வரி சலுகைகளை வழங்கியும் 2009 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரிச் சட்டத்தை திருத்தும் பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வரைவுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.