• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலம்
- பெறுமதிசேர்க்கப்பட்ட வரி தொடர்பில் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டப் பிரேரிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில திருத்தங்களுக்கு செயல்வலுவளிப்பதற்கும், உள்நாட்டு நிர்மாண கைத்தொழிலையும் அதேபோன்று உள்நாட்டு மூலப் பொருட்களைப் பயன்படுத்தும் சில உள்நாட்டு கைத்தொழில்களையும் ஊக்குவிப்பதற்கும் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.