• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவையை தாபித்தல்
- இளைஞர்களை சமூக சேவைகளிலும் சமூக அபிவிருத்தி பணிகளிலும் ஊக்குவிப்பதற்கும் அதேபோன்று அவர்களிடத்தில் தலைமைத்துவ மற்றும் ஆளுமை அபிவிருத்தியின் மூலம் குழு உணர்வினை உருவாக்குவது காலத்தின் தேவையாகவுள்ளது. ஆதலால், ஒழுக்கமிக்க ஆற்றல்நிரம்பிய இளைய சமுதாயமொன்றை இலங்கையில் உருவாகுவதை நோக்காக கொண்டு இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவையை தாபிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.