• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிலற்ற பட்டதாரிகளை பட்டதாரி பயிலுநர்களாக ஆட்சேர்ப்புச் செய்தலும் பயிற்றுவித்தலும்
- தொழிலற்ற பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் பயிற்றுவித்தல் கருத்திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களில் உள்வாரி மாணவர்களாக தமது பட்டங்களை பூர்த்தி செய்துள்ள 5,000 தொழிலற்ற பட்டதாரிகளை முதலாம் கட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கும் அத்துடன் 15,000 பட்டதாரிகளை இரண்டாம் கட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்து பயிற்றுவிப்பதற்கும் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முதலாம் கட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதன் பின்னர் 1,800 வெற்றிடங்களும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வெற்றிடங்களுமாக தொடர்ந்தும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதற்கிணங்க, 16,800 ஆகவுள்ள இந்த வெற்றிடங்களை முதலாவதாக 2012 ஆம் ஆண்டைச்சேர்ந்த பட்டதாரிகளையும் அதன் பின்னர் முறையே 2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையிலான பட்டதாரிகளையும் பயிலுநர்களாக துரிதமாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அறிந்துக் கொள்ளும் பொருட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.