• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக செயல்திறன் மிக்க சட்டரீதியான சட்டக் கட்டமைப்பொன்றை அறிமுகம் செய்தல்
- மக்கள் பயங்கரவாதிகளாக மாறுகின்றமையை தடுப்பதை இலக்காகக் கொண்டு, எதிர்காலத்தில் பயங்கரவாத குழுக்கள் எழுச்சி பெறுவதை தடுப்பதற்கான புதிய சட்ட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பதால், தற்காலிக மட்டுப்படுத்தல் கட்டளைகள், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை தடை செய்தல் மற்றும் விசேட வௌிநாட்டு பிரதேசமொன்றில் இருப்பதை கட்டுப்படுத்தல் மற்றும் ஆயளவை தகவல்கள் போன்ற துறைகளில் கவனத்தைச் செலுத்தி மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்கு பிரேரிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலந்துரையாட லொன்றை மேற்கொண்டதன் பின்னர், ஐக்கிய இராச்சியத்திலும் ஏனைய நாடுகளிலும் கிடைக்கத்தக்க விடயம் தொடர்பிலான சட்டங்களை ஆய்வு செய்ததன் பின்னர், இது குறித்து அமைச்சரவைக்கு விடயங்களை சமர்ப்பிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமையின் கீழ் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.