• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சூரியபல சங்ராமய' கட்டம் - II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாறை, ஹபரண நெய்யறி துணைநிலையங்கள் 02 சார்பில் சூரிய சக்தி மூல மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தல்
) - 'சூரியபல சங்ராமய' கட்டம் - II நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாறை நெய்யறி துணைநிலையம் சார்பில் 07 கருத்திட்டங்கள் வீதம் இணைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் 01 மொகாவொட் சூரிய சக்தி மூல 07 கருத்திட்டங்களையும் ஹபரண நெய்யறி துணைநிலையம் சார்பில் 07 கருத்திட்டங்கள் வீதம் இணைத்துக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் 01 மொகாவொட் சூரிய சக்தி மூல 07 கருத்திட்டங்களையும் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதற்கும் இது தொடர்பிலான மின்சாரம் கொள்வனவு செய்யும் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கும் இலங்கை மின்சார சபைக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.