• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டத்தை அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- ஏற்றுமதியை நோக்காகக் கொண்டு, விசேட பொருளாதார வலயத்தை தாபிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தெற்கு பிரதேச அபிவிருத்தி பணிகளை துரிதமாக நடைமுறைப் படுத்துவதற்காக 'ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தை' தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள ருகுணு பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன சட்டமூலத்தை அரசாங்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.