• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஹஜ் சட்டம்
- 'தேசிய ஹஜ் சட்டத்தை' தயாரித்து சட்டவரைநருக்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தில் உம்ரா யாத்திரையை ஒழுங்குறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்குவதற்கும் உரிய சட்டத்தின் பெயரை 'ஹஜ் மற்றும் உம்ரா சட்டம்' என திருத்துவதற்குமாக அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.