• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகளிர் உதவி தொலைபேசி சேவைக்கான இணைந்த மேடையொன்றைத் தாபித்தல்
- பெண்களுக்கு எதிரான சகல விதத்திலுமான பாகுபாடுகள், பெண்களின் உரிமைகளை மீறுதல், வன்கொடுமை, தீங்கிழைக்கும் அனைத்து சந்தர்ப்பங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளுக்கு உதவி மற்றும் சலுகை என்பவற்றை வழங்கும் நோக்கில் 1938 என்னும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் மகளிர் உதவி தொலைபேசி சேவையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள பெண்களுக்கு 24 மணித்தியாலமும் விரைவாகவும் அவசரமாகவும் பதிலளிப்பதற்கு இந்த தொலைபேசி சேவையை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் பற்றி உரிய அதிகாரிகளுக்கு கவனமாகவும் பாதுகாப்பாகவும் அறிக்கையிடும் பொருட்டு செல்லிடத் தொலைபேசியினை அடிப்படையாகக் கொண்ட இணைந்த மேடையொன்றைத் தாபிப்பதற்காக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.