• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை A006 வீதியுடன் குருநாகல் இடைமாறலை இணைப்பதற்கு புதிய நுழைவுப் பாதையொன்றை நிர்மாணித்தல்
- அரசாங்கத்தின் முன்னுரிமைக் கருத்திட்டமொன்றான மத்திய அதிவேக பாதை கருத்திட்டத்தின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான II ஆம் பகுதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு A006 வீதியில் நுழைவதற்கும் வௌியேறுவ தற்குமான வசதிகளை செய்வதற்கும் வாகன நெரிசலை குறைக்கும் விதத்தில் குருநாகல் பிரதான நகரத்தை தவிர்த்து செல்வதற்கான வசதியினை ஏற்பாடு செய்யும் விதத்திலும் மத்திய அதிகவேகப் பாதையின் குருநாகல் இடைமாறல் இடத்திற்கு ஊடாக அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை A006 வீதிக்கு இணைப்பினை வழங்கும் பொருட்டு 1.1 கிலோ மீற்றர் நீளமான புதிய இணைப்பு வீதியொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.