• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்தல் சட்டத்தை திருத்துதல்
- பசளை இறக்குமதி, உற்பத்தி, தயாரித்தல், விநியோகம் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் இதனோடு நேர்விளைவான விடயங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டும் 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க பசளை ஒழுங்குறுத்தல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டதோடு, இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்த வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பசளை பகுப்பாய்வு நடவடிக்கைமுறை, இதன் பொருட்டான ஆய்வுகூட உதவிகளைப் பெற்றுக் கொள்ளல், பசளை தரப்படுத்தல் மற்றும் சான்றுப்படுத்தல், தண்டப்பணத்தை திருத்துதல், ஒழுங்குவிதிகளை ஆக்கக்கூடிய துறைகளை குறிப்பிடுதல் போன்ற விடயங்களை முதன்மையாகக் கொண்டு பசளை ஒழுங்குறுத்தல் சட்டத்திற்கான திருத்தங்களை சட்டவரைநரின் ஊடாக வரையும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.