• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டம் - கிராமிய நிதியிடல் ஆக்கக்கூறினை செயல்படுத்துதலும் வட்டி சலுகையினை பெற்றுக் கொள்தலும்
- கமத்தொழிலுக்கான சருவதேச நிதியத்தின் உதவி மற்றும் உள்நாட்டு நிதியங்களின் பங்களிப்பின் மீது சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களின் புத்துயிரளிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே உடன்பாடு காணப்பட்டுள்ளது. தேயிலை மீள் செய்கை, புதிய இறப்பர் செய்கை என்பன இந்த கருத்திட்டத்தின் பிரதான ஆக்கக்கூறாகும். தேயிலை மீள் செய்கையின் போது உரிய கால எல்லையைக் கடந்த ஆயினும் கொழுந்து பறிக்கும் பயிர்களை கழற்றி அப்புறப்படுத்துவதனால் மீள செய்கைப்பண்ணப்படும் தேயிலை செடிகள் கொழுந்து பறிக்கும் காலம் வரை செய்கையாளர்களுக்கு இல்லாமற்போகும் வருமானத்தை ஏதேனும் விதத்தில் ஈடுசெய்து கொள்வதற்கும் புதிய இறப்பர் செய்கையில் பால் வெட்டும் காலம்வரை செய்கையாளர்களுக்கு ஏதேனும் வருமானத்தை ஈடுட்டுவதற்கும் சுயதொழிலொன்றுக்கு அல்லது குறுகியகால வருமானம் பெற்றுக் கொள்வதற்காக ஈடுபடுத்துவற்கு 'கிராமிய புத்துயிரளிப்பு ஆக்கக்கூறினை' கருத்திட்டத்தில் உள்வாங்கி அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.