• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேயிலை ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் தேயிலை மேம்பாட்டு மற்றும் சந்தைப்படுத்தல் வரியை திருத்துதல்
- 1975 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க இலங்கை தேயிலைச் சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோகிராம் ஒவ்வொன்றுக்கும் 3.50 ரூபாவைக் கொண்ட வரியொன்று பதிவு செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதியாளர்களிடமிருந்து அறவிடப்படுகின்றது. தற்போது தேயிலை ஏற்றுமதியின் மீது விதிக்கப்பட்டுள்ள ஏனைய நேரடி மற்றும் மறைமுக வரிகள் அதேபோன்று பொருளாதார சேவை கட்டணங்கள் காரணமாக தேயிலை உற்பத்தி செலவு மேலும் அதிகரித்துச் செல்கின்றமையினால் தேயிலை மேம்பாட்டு மற்றும் சந்தைப்படுத்தல் வரியை கிலோ கிராம் ஒன்றுக்கு 3.00 ரூபாவாக திருத்தும் பொருட்டிலான கட்டளையொன்றை சட்டவரைநரின் ஊடாக தயாரித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் பொருட்டும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.