• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1895 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சீருடை கட்டளைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலமொன்றை வரைதல்
- சிவிலியன்கள் சீருடை அணிவதை வரையறுத்தல், முறைப்படுத்தல் என்பன சார்பில் 1895 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சீருடை கட்டளைச் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஆயினும், இராணுவ சீருடைகளுக்கு சமமான சீருடைகளை வைத்திருக்கும் சந்தர்ப்பங்கள் உட்பட ஆட்கள் உடைப்பாணியாக இராணுவ சீருடைகளுக்கு சமமான வர்ணங்களிலுள்ள ஆடைகளை பயன்படுத்தும் போக்கும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக மிகவும் தாக்கத்தை செலுத்துகின்றமையினால் அதனை தடுப்பதற்காக நிலவிய சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு ஆக்கும் அவசரத் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக சட்ட ஏற்பாடுகளை அறிமுகம் செய்யும் பொருட்டு 1895 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சீருடை கட்டளைச் சட்டத்தை நீக்கி சீருடை சட்டம் என்னும் புதிய சட்டமூலமொன்றை வரைவதற்கு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.