• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தப்படும் சட்டத்தின் கீழ் இடர்விளைவிக்கக்கூடிய தொழில்கள் பட்டியல் வர்த்தமானி ஒழுங்குவிதிகளைத் திருத்துதல்
) - 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தப்படும் சட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கான 51 அபாயகரமான தொழில்கள் இனங்காணப்பட்டுள்ளன. ஆயினும் தற்போது சேவைபுரியும் சூழல் பெருமளவு மாறுப்பட்டுள்ளதோடு, சிறுவர்களுக்கு தீங்கிழைக்கும் மற்றும் அவர்களுடைய உடல், உள மற்றும் ஒழுக்க நெறி அபிவிருத்திக்கு தடையாக அமையக்கூடிய 77 பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புகள் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டில் உத்தேச அபாயகரமான தொழில்கள் ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இதற்கான அங்கீகாரம் கிடைத்தன் பின்னர் குறித்த ஒழுங்குவிதியை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.