• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரேசில் சாவோ பாவுலோ ஆராய்ச்சி மன்றத்திற்கும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கை
- இலங்கை தேசிய விஞ்ஞான மன்றமும் பிரேசில் சாவோ பாவுலோ ஆராய்ச்சி மன்றமும் தத்தமது நாடுகளில் விஞ்ஞான துறைக்கு நிதியளிக்கும் முக்கிய நிறுவனங்களாவதோடு, இந்த நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பினை செயற்படுத்தும் நோக்கில் இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு பற்றிய உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.