• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அடிப்படை ஆராய்ச்சிக்கான ரஷ்ய மன்றத்திற்கும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் விஞ்ஞான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கை
- இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பிலான கருத்துக்கள், தகவல்கள் மற்றும் ஆற்றல்கள் என்பவற்றை பரிமாறிக் கொள்ளும் பொருட்டு மேலதிக வாய்ப்பினை வழங்குவதற்கும் இரு நாடுகளினதும் ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு உதவுவதற்கும் இரு தரப்பினர்களுக்கும் இடையில் உறவினை அதிகரித்துக் கொள்வதை நோக்காக கொண்டு அடிப்படை ஆராய்ச்சிக்கான ரஷ்ய மன்றத்திற்கும் இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்திற்கும் இடையில் விஞ்ஞான ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.