• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துதல் - 2019
- - சுற்றுலாத் துறையானது கடந்த சில ஆண்டுகளினுள் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதத்தினைவிட கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. ஆயினும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட தாக்குதல் காரணமாக சுற்றுலாத் தொழில் கடும் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இந்த தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு விமான பயனங்களை தொடர்ச்சியாக செயற்படுத்துதல் அதேபோன்று விமான கம்பனிகளுக்கு அவர்களுடைய செயற்பாடுகளை நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் பெரும்பாலானோரை சுற்றுலா மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துவதற்காக ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் மிக முக்கியமானதாகும். இதற்கிணங்க, நாட்டிற்கு பயணங்களை மேற்கொள்ளும் விமானங்களின் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு இலங்கையில் விமானங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்கள், நிலப்பரப்பின் மீது மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் போன்ற பிற சேவைகளை வழங்குதல் என்பன பொருட்டு அறவிடப்படும் கட்டணங்களை குறைக்குமாறு SriLankan Airlines Limited கம்பனிக்கு ஆலோசனை வழங்குதல், சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் விலையுடன் ஒத்தியலும் விதத்தில் விமான எரிபொருள் விலையினை குறைக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்குதல், வௌிநாடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் செலுத்தப்பட வேண்டிய வௌிச்செல்லும் வரியினை 10 ஐக்கிய அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும் வரவுசெலவுத்திட்ட பிரேரிப்பின் அமுல்படுத்துகையை இடை நிறுத்துதல் என்பன பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை ஆறு (06) மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.