• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை - 2019
- - உள்நாட்டிலும் அதேபோன்று சர்வதேச ரீதியிலும் சிக்கலான சூழலில் இலங்கையின் பேரின பொருளாதார முகாமைத்துவம் தொடர்பிலும் அரசாங்கத்தின் வருமானம், செலவு மற்றும் காசுப்பாய்ச்சல் முகாமை தொடர்பிலும் தௌிவுபடுத்தி இலங்கையின் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களினுள் அரசாங்கத்தின் அரசிறை பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள "அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கையை" 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.