• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மேல் மாகாண PIC 07 கருத்திட்டத்திற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குத
- - ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பு மேற்பார்வை, ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் ஏனைய நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் அடங்கலாக மேல் மாகாணத்தில் PIC 07 கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியாவின் M/s. SMEC International (Pvt) Ltd, இலங்கையின் துணை மதியுரை நிறுவனமான Resources Development consultant (Pvt) Ltd மற்றும் இலங்கையின் Master Hellie's Engineering Consultants Ltd ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.