• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் பெல்ஜியம் நாட்டின் Leuven - Limburg பல்கலைக்கழக கல்லூரிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- - தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்சார் நிபுணத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்கும் பெல்ஜியம் நாட்டின் Leuven - Limburg பல்கலைக்கழக கல்லூரிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.