• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்தியஸ்தத்தின் மூலம் சர்வதேச தீர்வு உடன்படிக்கைகள் பற்றிய சமவாயம்
- - மத்தியஸ்தம் என்பது காலம் மற்றும் செலவு என்பவற்றை மீதப்படுத்தி பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளும் தீர்வொன்றுக்கு வருவதற்கும் அதேபோன்று வர்த்தக உறவுகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் ஆற்றலுள்ள பிணக்குகளைத் தீர்க்கும் முக்கியமான முறையொன்றாகும். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் மத்தியஸ்தத்தின் மூலம் சர்வதேச தீர்வு உடன்படிக்கைகள் பற்றிய சமவாயம் 2018 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, இந்த சமவாயத்திற்கு இலங்கை சார்பில் கைச்சாத்திடும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.