• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டங்களுக்கு மேலதிக திருத்தங்களை சிபாரிசு செய்தல்
- - 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தை நிகழ்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் ஆரம்ப வரைவொன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு, நிர்மாணிப்பு கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை அதேபோன்று இலங்கை நிர்மாணிப்பு கைத்தொழில் சபை அடங்கலாக கைத்தொழில் துறை சார்ந்த நிறுவனங்கள் சிலவற்றினால் இந்த கைத்தொழிலில் காணக்கிடைக்கும் முறைகேடுகள் மற்றும் குறைபாடுடைய செயலாற்றுகை என்பவற்றை தடுப்பதற்கு மேலும் தேவைப்படும் ஏற்பாடுகளை இந்த சட்டவரைவில் சேர்க்கும் பொருத்தமான தன்மை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. குறித்த மேலதிக திருத்தங்களையும் உள்ளடக்கி இந்த சட்டமூலத்தை திருத்தும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.