• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழுங்குறுத்துவதற்காக 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்துதல்
- - இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கடற்றொழில் கப்பல்கள் சட்டவிரோதமாக வௌிநாடுகளுக்குரிய பொருளாதார வலயங்களுக்குள் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சம்பந்தமாக அந்த நாடுகளினால் செய்யப்படும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு புறம்பாக போதைப்பொருள் கடத்தல், வௌிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக பொருட்களை கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு கடற்றொழில் படகுகளை பயன்படுத்தும் போக்கும் துரிதமாக அதிகரித்துள்ளதோடு, இந்த குற்றங்கள் சம்பந்தமாக தொடுக்கப்படும் வழக்குகளில் மிகவும் அரிதாகவே கப்பல் உரிமையாளருக்கு குற்றத்துக்குரிய தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது சில சந்தர்ப்பங்களில் மறியற் தண்டனைக்கு ஆளாவதற்கு நேரிடுகின்றது. இதற்கிணங்க, இத்தகைய குற்றங்களை புரியும் கப்பல் உரிமையாளருக்கு அல்லது கப்பலை இயக்குபவருக்கு அல்லது கப்பல் தலைவருக்கு அல்லது கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு அல்லது இவற்றுக்கு உதவுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் வகையில் உரிய திருத்தங்களை உள்ளடக்கி கடற்றொழில் மற்றும் நீரகவளமூல சட்டத்தை திருத்தும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.