• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆசிய பசுபிக் சங்கத்தின் ஒத்துழைப்புடன் குறைந்த பயன்பாடுடன்கூடிய மீன் மற்றும் சமுத்திரம் சார்ந்த உயிரியல் வளங்கள் உட்பட அவற்றின் அபிவிருத்தி சம்பந்தமாக பிராந்திய செயலமர்வொன்றை நடாத்துதல்
- - ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை தமது மீன் மற்றும் உயிரியல் வளங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளாமை சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தி அது தொடர்பில் சிறந்த அறிவினையும் தேர்ச்சியினையும் பெற்றுக் கொண்டிருந்த போதிலும் இலங்கை அத்தகைய அறிவு அல்லது தகவல்களை போதுமான அளவு பெற்றுக் கொள்ளவில்லை. ஆதலால், குறைந்த பயன்பாடுடன் கூடிய மீன் மற்றும் உயிரியல் சார்ந்த பிராந்திய மாநாடொன்றை நடாத்தி ஏனைய நாடுகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கைசபை திட்டமிட்டுள்ளது. இதற்கிணங்க, கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆசிய பசுபிக் சங்கத்தின் ஒத்துழைப்புடன் குறைந்த பயன்பாடுடன் கூடிய மீன் மற்றும் சமுத்திரம் சார்ந்த உயிரியல் வளங்கள் உட்பட அவற்றின் அபிவிருத்தி சம்பந்தமாக பிராந்திய செயலமர்வொன்றை 2019 யூலை மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.