• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயிர்செய்கைகளுக்கு வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல்
- - வன விலங்குகளினால் கமத்தொழில் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களினால் எழும் பிரச்சினைகளை குறைப்பது தொடர்பில் நிலைபேறுடைய வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு உரிய அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்புடன் குழுவொன்று தாபிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக இந்தக் குழுவினால் செயற்பாட்டுத் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.