• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுத்த
- - 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறிய வௌிநாட்டவர்களுக்கு உரிய நீதிமன்ற அல்லது நிறுவன ரீதியிலான நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்படும் வரையும் குறித்த நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னர் மீண்டும் தமது தாய் நாட்டிற்கு செல்வதனை தாமதப்படுத்துகின்ற வௌிநாட்டவர்கள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் 36 பேர்களுக்கு மாத்திரமே போதுமான வசதிகள் இருந்தாலும் தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 பேர்கள் இங்கு தடுத்து வைக்க நேர்ந்துள்ளதோடு, இவ்வாறு ஆகக்குறைந்த வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டவர்களுக்கிடையே பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆதலால், மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் அவர்களுடைய தாய் நாட்டிற்கு இந்த நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.