• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்வி சிறப்புக்கான புலமைப்பரிசில் நிதியத்தை (SEE Fund) தாபித்தல்
- - தற்போது க.பொ.த (உ.த) பரீட்சைக்குத் தோற்றும் 250,000 மாணவர்களில் கிட்டத்தட்ட 160,000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்விக்கான அனுமதிக்கு தகுதியினைப் பெற்றுக் கொள்கின்றனர். கல்விச் சிறப்பு மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பிலான தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் குறிக்கோளுடன், ஹார்வாட், MIT, ஒக்‌ஸ்போர்ட் மற்றும் கேம்பிறிஜ் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமது பட்டக் கற்கைகளை தொடரும் பொருட்டு பௌதிக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், தொழினுட்பம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய துறைகளிலுள்ள அம்மாணவர்களில் அதியுயர் செயற்றிறனாளிகளுக்கு புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு அரசாங்கம் விரும்புகின்றது. ஆதலால் வரவுசெலவுத்திட்டம் 2019 இற்கூடாக கல்வி சிறப்புக்கான புலமைப்பரிசில் நிதியத்தை (SEE Fund) தாபிப்பதன் பொருட்டு பாராளுமன்றத்தில் சட்டமொன்றை அங்கீகரிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட நோக்கத்திற்கான சட்டத்தை வரையும்படி சட்டவரைநருக்கு அறிவுறுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.