• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு) சட்டத்தை திருத்துதல்
- - மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு நிலையங்களின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு) சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. எனினும், மருந்துகளுக்கும் ஊக்கமருந்துகளுக்கும் அடிமைப்பட்டவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு தொடர்பான செய்முறையினை மேலும் முறைமைப்படுத்தும் பொருட்டு தற்கால தேவைகளுடன் பொருந்த செய்வதற்கு கூறப்பட்ட சட்ட திருத்தத்திற்கான தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சிகிச்சை நிலையத்திற்கு பொறுப்பான பணிப்பாளரின் தொழிற்பாடுகளையும் நியமனத்தையும் ஒழுங்குறுத்தல், தனியார் சிகிச்சை நிலையங்களுக்கு உரிமங்களை வழங்குதல், அவற்றை புதுப்பித்தல் மற்றும் இரத்துச் செய்தல் என்பவற்றை ஒழுங்குறுத்துதல், சுகாதார சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் சேவைகளை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் புனர்வாழ்வளிப்பின் கட்டாய காலப்பகுதியை உள்ளடக்குதல் போன்ற விடயங்களை உள்ளடக்கி 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க மருந்துகளுக்கு அடிமைப்பட்டவர்கள் (சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பு) சட்டத்தை திருத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.