• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டிஜிட்டல் மயமாக்கலுக்கான மகளிர் சம்மேளனத்தை இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதில் முனைப்பான பங்களிப்பாளராக ஆக்குதல்
- - இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்துவதில் ஒன்றிணைந்த அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்குடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப துறையில் வலுவூட்டப்பட்ட பெண்களினால் டிஜிட்டல் மயமாக்கலுக்கான மகளிர் சம்மேளனம் தாபிக்கப்பட்டுள்ளது. மகளிர் முயற்சியாண்மை மற்றும் தலைமைத்துவ ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் அதேபோன்று டிஜிட்டல் மயமாக்கலுக்கூடாக எதிர்பார்க்கப்பட்ட நலன்களின் கணிசமானளவு மேம்பாடு தொடர்பான அரசாங்க கொள்கைகள் மற்றும் தந்திரோபாயங்கள் ஆகியவற்றுடன் டிஜிட்டல் மயமாக்கலுக்கான மகளிர் சம்மேளனத்தின் குறிக்கோள்கள் ஒருங்கிசைவது அவதானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க நிறுவனங்களினால் நிறைவேற்றப்படும் தகவல் தொழிநுட்பத்துடன் இணைந்த மகளிர் முயற்சியாண்மை பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களில் முனைப்பான பங்குபற்றுநராக டிஜிட்டல் மயமாக்கலுக்கான மகளிர் சம்மேளனத்தை இணைப்பதற்கும் அந்த சம்மேளனத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குவதற்கும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.