• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசிறை விதிகள் பற்றிய கொள்கை கட்டமைப்பைத் திருத்துதல்
- அரசாங்க படுகடன் நிலைத்துநிற்கும் தன்மை மற்றும் அரசிறை இடர்களை முகாமித்தல் கருதி சட்டமாக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசிறை முகாமைத்துவ பொறுப்பு கட்டமைப்பு ஒன்றின் கீழ் இலங்கையின் அரசிறைச் செயற்பாடுகள் கையாளப்படுகின்றன. எவ்வாறாயினும், அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள குறிக்கோள்களானவை அதன் அறிமுகத்திலிருந்து எதிர்கொள்ள வேண்டியிருந்த பேரினப் பொருளாதார மற்றும் அரசிறை சவால்கள், சுனாமி பேரழிவு மற்றும் நீண்டுசென்ற உள்நாட்டுக் குழப்பம் என்பன காரணமாக 2006 ஆம் ஆண்டிலிருந்து அதன் அடைவினை எட்டுவதற்கு தொடர்ச்சியாக தவறியுள்ளன. ஆதலால், மேற்கூறப்பட்ட சில அரசிறை இலக்குகள் 2013 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் திருத்தப்பட்டுள்ளன. அதற்கிணங்க, பொறுப்புவாய்ந்த அரசிறை முகாமைத்துவத்தை வலுவூட்டுதல், படுகடன் விதிகள், நடுத்தவணைக்கால அரசிறை கட்டமைப்பு, தொழிற்பாட்டு இலக்குகள், தன்னியக்க திருத்த பொறிமுறை, நெகிழ்வுத்தன்மை, வௌிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை உள்ளடங்கலான நடைமுறையிலுள்ள அரசிறை ஒழுங்குவிதி கட்டமைப்பைத் திருத்துதல் என்னும் நோக்கத்துடன் 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தை திருத்துவதற்கு அல்லது தற்போது வரையப்பட்டுவரும் உரிய திருத்தங்களை அரசிறை முகாமைத்துவ சட்டத்தில் உள்ளடக்குவதற்கு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.