• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை கொள்வனவு - 2019
- Ceylon Fertilizer Company Limited நிறுவனத்தினதும் Colombo Commercial Fertilizer Company Limited நிறுவனத்தினதும் யூலை மாதத்திற்கான பசளைத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்கம் கருதி, 30,000 மெற்றிக் தொன் யூரியாவை (Granular) மெற்றிக் தொன் ஒன்று 318.25 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் Agri Commodities and Finance நிறுவனத்திலிருந்தும் 3,000 மெற்றிக் தொன் Muriate of Potashஐ மெற்றிக் தொன் ஒன்று 342.2 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s.Agricultural Resources & Investment PTE. Ltd., நிறுவனத்திலிருந்தும் அத்துடன் 15,500 மெற்றிக் தொன் Triple Super Phosphate ஐ மெற்றிக் தொன் ஒன்று 324 ஐக்கிய அமெரிக்க டொலர் எனும் வீதத்தில் M/s. Golden Barley International PTE Ltd நிறுவனத்திலிருந்தும் கொள்வனவு செய்யும் பொருட்டு கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது