• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக கொள்கலன்களைக் பெட்டிகளை கொள்வனவு செய்தல்
- தேசிய பிரச்சினையொன்றாக தோன்றியுள்ள, மாநகர திண்மக் கழிவு பிரச்சினையை தீர்க்கும் குறிக்கோளுடன் அறுவக்காலுவிலுள்ள மாநகர திண்மக்கழிவு துப்பரவாக்க நிலநிரப்பல் அகற்றல் தீர்வை செயற்படுத்தும் நோக்கம் கருதி, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்குத் தேவையான கொள்கலன் பெட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s. Dongfang Electric International Corporation நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.