• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திரிபோஷா லிமிட்டட் நிறுவனத்திற்கு திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோயா அவரை 6,000 மெற்றிக்தொன் வழங்குவதற்கான கேள்வி
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, போசாக்கு குறைபாடான பிள்ளைகளுக்கும் போசாக்கு பிரச்சினைகளைக் கொண்ட கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இலவசமாக விநியோகிக்கப்படும் போசாக்கு குறைநிரப்பு உணவான திரிபோஷா உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் 6,000 மெற்றிக் தொன் கொண்ட சோயா அவரைகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகையினை 840 மில்லியன் ரூபா தொகைக்கு M/s.S.D.K. United Agri Ventures (Pvt.) Limited நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.