• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீட்டில் இரத்த சுத்திகரிப்பு முறைமையினை மேற்கொள்ளும் பொருட்டு நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு வசதிகளை வழங்குதல்
- காரணம் கண்டறியப்படாத நாட்பட்ட சிறுநீரக நோய் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு வீட்டிலேயே Automated Peritoneal Dialysis முறைமையைப் பயன்படுத்துவதற்கான முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்து வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தினை அமுலாக்குவதற்காக 2019 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபா கொண்ட தொகையொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடானது சிறுநீரக நோயாளர்களின் ஆயுள் காலத்தை நீடிப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைக்கு சிறந்த பயன்விளை வொன்றை அளிப்பதற்கும் பங்களிப்புச் செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, மாதமொன்றுக்கு நோயாளி ஒருவருக்கு 103,740/- எனும் வீதத்தில் எட்டு (08) வருட காலப்பகுதிக்கு இந்த கருத்திட்டத்தை அமுலாக்குவதற்காக M/s. Lucenxia Healthcare (Pvt.) Ltd., நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.