• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Batticaloa Campus (Pvt.) Ltd., நிறுவனம் தொடர்பிலான அவதானிப்புரைகள் குறித்து கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
- பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, Batticaloa Campus (Pvt.) Ltd., நிறுவனம் தொடர்பிலான கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரின் அவதானிப்புரை அறிக்கையானது அமைச்சரவையின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டதுடன், கூறப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையிடும் பொருட்டு நிதி அமைச்சர், நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை யினால் தீர்மானிக்கப்பட்டது.