• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-07-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்விச் சூழலை விருத்தி செய்தல்
மூன்று தசாப்த காலமாக அங்கு நிலவிய குழப்பமான சூழ்நிலையின் காரணமாக வீழ்ச்சிகண்ட, கிளிநொச்சிப் பிரதேசத்தின் கல்விச் செயற்பாடுகளை உயர்ந்த தரநியமத்தில் மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறுபட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. அதற்கிணங்க, கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கருத்திட்ட மொன்றானது, கொரிய சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையினால் 2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மானியத்தைக் கொண்டு 2011 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் இந்தக் கருத்திட்டத்தின் விரிவாக்கமானது 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 13 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை தரமுயர்த்தும் பொருட்டு 7.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மானியத்தைக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படும் என்ற நோக்கத்திற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.